'அஸ்வினி' ரேடார் வாங்க ரூ.2,463 கோடியில் ஒப்பந்தம்
'அஸ்வினி' ரேடார் வாங்க ரூ.2,463 கோடியில் ஒப்பந்தம்
ADDED : மார் 13, 2025 11:48 PM

புதுடில்லி,:விமானப் படைக்கு, 2,463 கோடி ரூபாய் மதிப்பில், 'அஸ்வினி' என்ற குறைந்த உயரத்தில் நகரும் நவீன ரேடார் அமைப்பை கொள்முதல் செய்ய, 'பெல்' என்ற 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, அஸ்வினி ரேடாரை வினியோகம் செய்வது மட்டுமின்றி, பராமரிப்பையும் பெல் மேற்கொள்ள உள்ளது.
இந்த ரேடாரானது வாகனத்தில் பொருத்தப்பட்டு, மலைப் பகுதிகள் உள்ளிட்ட உயரமான இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இது, 30 மீ., முதல் 15 கி.மீ., உயரம் வரை செயல்படும் திறன் கொண்டது.
இந்த ஆண்டில் இதுவரை, 17,030 கோடி ரூபாய்க்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று, இந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.