ADDED : ஜூலை 08, 2024 12:38 AM

புதுடில்லி:பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக்கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக, 'லக்கேஜ் லாசர்ஸ் டாட் காம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், பயணியர் தொலைத்த லக்கேஜ் எண்ணிக்கைகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
இதன் தரவுகளின்படி, ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில், 50,001 லக்கேஜ்களை தவற விட்டுள்ளது-.
மேலும், ஏர் இந்தியா நிறுவனம், ஒவ்வொரு 36 லக்கேஜ்களில், ஒரு லக்கேஜை தவறவிட்டுள்ளது. அத்துடன் அதிகளவில் லக்கேஜ்களை தொலைத்த விமான நிறுவனங்களின் பட்டியலில், அதிக எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள், ஒவ்வொரு 72 லக்கேஜ்களில் ஒன்றை தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ஏர் இந்தியாவை தொடர்ந்து, 'வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ்' ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.