ADDED : ஆக 22, 2024 01:43 AM

சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வகைகளான 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்களின் சோதனை முறையிலான தயாரிப்பை, பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் துவக்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் வகை போன்கள் வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதையடுத்து, ஆப்பிள் போன் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனமான பாக்ஸ்கான், சென்னையிலுள்ள அதன் ஆலையில், இதற்கான தயாரிப்பை சோதனை முறையில் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகை போன்களுக்கான பல்வேறு உதிரி பாகங்களை, பாக்ஸ்கான் அதிகளவில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது.
ப்ரோ வகை போன்கள் தயாரிப்புக்கான சிறப்பு அசெம்பிளி லைன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுவதால், இந்திய உற்பத்தி துறைக்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
சீனாவுக்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் டாப் எண்டு எனப்படும் ப்ரோ வகை போன்களை உருவாக்குவது இதுவே முதல் முறை.