ADDED : செப் 02, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., வருவாய் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்து 1.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு ஜூலையில் 1.82 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு ஆகஸ்டில், உள்நாட்டு வருவாய் 9.20 சதவீதம் அதிகரித்து 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சரக்கு இறக்குமதி வாயிலாக மொத்த ஜி.எஸ்.டி., வருவாய் 12.10 சதவீதம் அதிகரித்து 49,976 கோடி ரூபாயாகஇருந்தது. மேலும், இம்மாதத்தில் ரீபண்டு தொகை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகரித்து 24,460 கோடி ரூபாயாக இருந்தது.
ரீபண்டு தொகை சரி செய்த பின், நிகர ஜி.எஸ்.டி., வருவாய் 6.50 சதவீதம் அதிகரித்து 1.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.