ADDED : ஜூன் 15, 2024 09:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு உள்ளிட்ட ஆலோசனை வழங்க, தமிழக அரசின் 'பேம் டி.என்' நிறுவனம், 'இந்தியா எஸ்.எம்.இ., ஆக்சில்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துஉள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்தியா எஸ்.எம்.இ., ஆக்சில் நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும், பல நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து தெரியவில்லை.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக இந்தியா எஸ்.எம்.இ., நிறுவனம், அவற்றுக்கு தீர்வு காண ஆலோசனை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.