பிரிட்டிஷ் டெலிகாம் பங்குகளை ரூ.33,000 கோடிக்கு வாங்கும் பார்தி என்டர்பிரைசஸ்
பிரிட்டிஷ் டெலிகாம் பங்குகளை ரூ.33,000 கோடிக்கு வாங்கும் பார்தி என்டர்பிரைசஸ்
ADDED : ஆக 13, 2024 06:42 AM
புதுடில்லி : 'பார்தி என்டர்பிரைசஸ்' நிறுவனம், பிரிட்டன் தொலைதொடர்பு நிறுவனமான 'பி.டி.,' குழுமத்தின் 24.50 சதவீத பங்குகளை, 33,200 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின், சர்வதேச முதலீட்டு பிரிவான 'பார்தி குளோபல்', பிரிட்டனைச் சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான பி.டி., எனப்படும் 'பிரிட்டிஷ் டெலிகாம்' குழுமத்தின் 24.50 சதவீத பங்குகளை 33,200 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பார்தி என்டர்பிரைசஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்த முதலீடானது, இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவுகளை மேம்படுத்தும். செயற்கை நுண்ணறிவு மற்றும் 5ஜி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முக்கிய பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே, தொலைதொடர்பு துறையில் ஒரு புதிய ஒருங்கிணைப்பை உருவாக்க இந்த முதலீடு உதவும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

