கேரளாவில் பிரிகேட் குழுமம் 1,500 கோடி ரூபாய் முதலீடு
கேரளாவில் பிரிகேட் குழுமம் 1,500 கோடி ரூபாய் முதலீடு
ADDED : பிப் 23, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரியல் எஸ்டேட் நிறுவனமான 'பிரிகேட்' குழுமம், தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில், கேரளாவில் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக 12,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, இதற்கான அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வாயிலாக, இக்குழு, தன் இரண்டாவது உலக வர்த்தக மையத்தை அமைக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே, கொச்சியில் இந்நிறுவனத்தின் முதலாவது உலக வர்த்தக மையம் அமைந்துஉள்ளது.
மேலும், கொச்சியில் குடியிருப்பு திட்டம் மற்றும் வைக்கத்தில் சொகுசு ரிசார்ட் உள்ளிட்டவைகளை கட்டவும் திட்டமிட்டுள்ளது.

