பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை காப்பாற்ற அமெரிக்க குழுமத்துடன் ஆலோசனை
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை காப்பாற்ற அமெரிக்க குழுமத்துடன் ஆலோசனை
ADDED : மே 28, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை பெற, அமெரிக்காவின் 'போஸ்டன் கன்சல்டிங் குரூப்' அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலகளவில் முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனமான போஸ்டன் குழுமம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கான மூன்று ஆண்டு கால செயல்திட்டத்தை தயார் செய்ய உள்ளது. இந்த ஆலோசனை சேவைக்காக, போஸ்டன் நிறுவனத்துக்கு 132 கோடி ரூபாய் கட்டணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுச் செலவைக் குறைப்பது, வருவாயை மேம்படுத்துவது, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவது, பயன்பாட்டை அதிகரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை பெறப்பட உள்ளது.
ஆலோசனை கட்டணமாக 'போஸ்டன்' நிறுவனத்துக்கு 132 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது