சென்னையில் ரூ.1,000 கோடியில் 'கேப்ஜெமினி' புதிய அலுவலகம்
சென்னையில் ரூ.1,000 கோடியில் 'கேப்ஜெமினி' புதிய அலுவலகம்
ADDED : ஜூலை 03, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'கேப்ஜெமினி' நிறுவனம், சென்னையில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிதாக 5,000 பேர் பணிபுரியும் வகையில் அலுவலகம் ஒன்றின் கட்டுமானத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 6 லட்சம் சதுரடியில் அமையும் இந்த அலுவலகத்தில், நிறுவனத்தின் நிதிசேவை, பொறியியல், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலக கட்டுமானத்தில், புதுமையான எரிசக்தி, நீர்சேமிப்பு தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படும் எனவும், வருகிற 2027ம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.