ADDED : பிப் 25, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஹரியானாவின் கார்கோடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலையில், உற்பத்தி துவங்கியதாக 'மாருதி சுசூகி' நிறுவனம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் மட்டும் மூன்று ஆலைகளை அமைத்துள்ள இந்நிறுவனம், நாடு முழுதும், நான்கு ஆலைகளை வைத்துள்ளது.
இந்த ஆலை, 900 ஏக்கர் பரப்பளவில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2022ல், கார்கோடா ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆலையில், மாருதி பிரெஸ்ஸா கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, இந்த ஆலையில், ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.