தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2 லட்சம் கோடி

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2 லட்சம் கோடி

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2 லட்சம் கோடி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி., வசூல் 15 சதவீதம் அதிகரித்து, 2.04 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், மூன்றாவது முறையாக, ஜிஎஸ்டி வசூல் இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஏப்ரலில் 2.43 லட்சம் கோடி ரூபாயும் ஜூலையில் 2.11 லட்சம் கோடி ரூபாயும் வசூலாகி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜி.எஸ்.டி., வசூல் 11.60 சதவீதம் வளர்ச்சியடைந்து 12.46 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயிலான வருவாய் 10.10 சதவீதம் உயர்ந்து 1.38 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வாயிலான வருவாய் 26 சதவீதம் அதிகரித்து 65,525 கோடி ரூபாயாகவும் இருந்தது.

தமிழகத்தில் 5% சரிவு


கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில், தமிழகத்தில் இருந்து 10,670 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் வசூல் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 10,188 கோடி ரூபாயாக குறைந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us