/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பொது
/
தமிழகத்தில் ஜி.எஸ்.டி., நிலுவை வைத்திருக்கும் 60,000 பேருக்கு வணிக வரித்துறை நினைவூட்டல் வட்டி, அபராத தள்ளுபடிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்

ADDED : பிப் 26, 2025 11:55 PM

சென்னை:தமிழகத்தில், கடந்த 2017 - 18 முதல், 2019 - 20 வரையிலான மூன்று ஆண்டுகளில், 60,000 பேர், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியுள்ளது. அவர்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் அளித்துள்ள கால அவகாசத்திற்குள் நிலுவை வரியை செலுத்தி விட்டால், வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும்.
வரும் மார்ச், 31 தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, நிலுவை வைத்து உள்ளவர்களை மொபைல் போன், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் பணியில், வணிக வரித்துறை ஈடுபட்டுள்ளது.
வணிகர்களின் ஜி.எஸ்.டி., தாக்கலில், தணிக்கை மற்றும் ஆய்வு வாயிலாக தவறு கண்டுபிடிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், துறையில் இருந்து வரிவிதிப்பு ஆணை அனுப்பப்படுகிறது.
தள்ளுபடி திட்டம்
அவர்கள், ஜி.எஸ்.டி., வட்டி, அபராதம் ஆகியவற்றை சேர்த்து செலுத்த வேண்டும். அதன்படி, நாடு முழுதும், 2017 - 18, 2018 - 19, 2019 - 20க்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பு ஆணையின்படி ஏராளமானோர் வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றை செலுத்தாமல் உள்ளனர்.
எனவே, நிலுவையில் உள்ள வரியை வரும் மார்ச், 31ம் தேதிக்குள் செலுத்தும்பட்சத்தில், வட்டி, அபராதத்தை தள்ளுபடி செய்யும் திட்டத்தை, ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவித்து உள்ளது.
அவகாசம்
அதன்படி, தமிழகத்தில், 60,000 பேர் ஜி.எஸ்.டி., நிலுவை வைத்துள்ளனர். இந்த விபரத்தை, ஜி.எஸ்.டி., கவுன்சில், தமிழக வணிக வரித்துறையிடம் வழங்கிஉள்ளது.
கவுன்சில் வழங்கிய தள்ளுபடி திட்டத்திற்கு, இன்னும் ஒரு மாதமே அவகாசம் உள்ளது.
எனவே, நிலுவை வரி வைத்துள்ள, 55,000 - 60,000 பேரை, மின்னஞ்சல், விரைவு தபால், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, நிலுவை வரியை செலுத்தி, வட்டி, அபராதம் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறுமாறு, வணிக வரித்துறை அறிவுறுத்தி வருகிறது.
இதுதவிர, 19 கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தில், இணை ஆணையர்கள் மற்றும், துணை ஆணையர்களை, வரி நிலுவை வைத்திருப்பவர்கள் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய அறிவுறுத்தப் பட்டு உள்ளது.