UPDATED : ஆக 04, 2024 10:30 AM
ADDED : ஆக 04, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜூலை மாத வர்த்தக வாகன விற்பனை 8.88 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், வர்த்தக வாகன விற்பனை 75,470 ஆக இருந்த நிலையில், இந்த ஜூலையில் 68,774 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான டாடா, மஹிந்திரா மற்றும் அசோக் லேலாண்டு ஆகியவை விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக இசுசூ எஸ்.எம்.எல்., நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 37.92 சதவீதமாக உயர்ந்தள்ளது.
விற்பனை வீழ்ச்சிக்கு பருவமழை, விலைவாசி உயர்வு, வினியோக தொடரில் தடங்கல்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.