எண்ணுாரில் மீண்டும் உற்பத்தியை துவங்கியது 'கோரமண்டல்' நிறுவனம்
எண்ணுாரில் மீண்டும் உற்பத்தியை துவங்கியது 'கோரமண்டல்' நிறுவனம்
ADDED : ஆக 16, 2024 11:12 PM

புதுடில்லி:சென்னை ஆலையில், மீண்டும் உற்பத்தியை துவங்கியிருப்பதாக, 'கோரமண்டல் இண்டர்நேஷனல்' தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து, பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 5.60 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை 1,779.90 ரூபாய் என்ற அளவில் புதிய உச்சத்தை தொட்டது.
செகந்திராபாதை தலைமையிடமாக கொண்ட கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனம், நேற்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை எண்ணுாரில் உள்ள தொழிற்சாலையில், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், பாஸ்பரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலம் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் எண்ணுாரில் அம்மோனியா கசிவு ஏற்பட்டதன் காரணமாக, உற்பத்தியை நிறுத்துமாறு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

