ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ரூ.23,738 கோடிக்கு இறக்குமதி
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ரூ.23,738 கோடிக்கு இறக்குமதி
ADDED : ஆக 15, 2024 10:15 PM

புதுடில்லி:ரஷ்யாவில் இருந்து, 23,738 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை, இந்தியா கடந்த ஜூலையில் இறக்குமதி செய்து உள்ளது.
ரஷ்யாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு சீனா. இதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 23,738 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், சீனாவின் பங்கு 47 சதவீதமாகவும்; இந்தியாவின் பங்கு, 37 சதவீதமாகவும் உள்ளது.
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்து வருகின்றன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் ரஷ்யா வழங்கி வருகிறது.
இந்தியாவும் - சீனாவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை மட்டுமின்றி நிலக்கரியையும் இறக்குமதி செய்துள்ளன. கடந்த 2022 டிசம்பர் 5 முதல் 2024 ஜூலை இறுதி வரையிலான காலக்கட்டத்தில், ரஷ்யாவின் நிலக்கரி ஏற்றுமதி யில், சீனாவின் பங்கு 45 சதவீதமாகவும், இந்தியாவின் பங்கு 18 சதவீதமாகவும் உள்ளது.