ADDED : மே 10, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான கிருத்திவாசன், கடந்த 2024ம் நிதியாண்டுக்கான சம்பளமாக, 25 கோடி ரூபாய் பெற்றுள்ளார் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிருத்திவாசன், கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதி வரை வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடுக்கான உலகளாவிய தலைவராக இருந்தார்.
அதன்பின் கடந்த 2023 ஜூன் 1ம் தேதி, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்த இரு பொறுப்புகளில் இருந்தபோது அவர் ஊதியமாக, 25.40 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.