'தினமலர்' செய்தி எதிரொலி; பயனாளிக்கு மானியம் விடுவிப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி; பயனாளிக்கு மானியம் விடுவிப்பு
ADDED : ஆக 15, 2024 10:07 PM

சென்னை: மத்திய அரசு, உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்' திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் துவங்க இயந்திரம் மதிப்பில், 35 சதவீதம் அல்லது 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், பல பிரிவில் மானியம் வழங்கப்படுகிறது.
மொத்த மானியத்தில் மத்திய அரசு 60 சதவீதமும்; தமிழக அரசு 40 சதவீதமும் வழங்குகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, தொழில் துவங்கிய 2,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, 50 கோடி ரூபாய் அளவுக்கு மானியம், கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை.
இதுகுறித்து இம்மாதம் 11ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை விடுவித்துள்ளது.

