ADDED : ஜூலை 18, 2024 01:39 AM

புதுடில்லி:பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதத்தில் வளர்ச்சி 6.80 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
கடந்த நிதியாண்டில் பதிவான கூடுதல் வளர்ச்சி மற்றும் நடப்பு நிதியாண்டில் ஊரகப்பகுதிகளில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, கணிப்பை உயர்த்துவதாக பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை 7 சதவீதத்திலிருந்து, 7.20 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது நினைவுகூரத்தக்கது.
ஆசிய மேம்பாட்டு வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் கணிப்பில் மாற்றமின்றி, 7 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.
வழக்கத்தை விட பருவமழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயத் துறை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், வளர்ச்சிக் கணிப்பை அப்படியே தொடர்வதாக கூறியுள்ளது.