முன்பணத்துக்கான உச்ச வரம்பு இரட்டிப்பாக்கியது இ.பி.எப்.ஓ.,
முன்பணத்துக்கான உச்ச வரம்பு இரட்டிப்பாக்கியது இ.பி.எப்.ஓ.,
ADDED : ஏப் 18, 2024 11:46 PM

புதுடில்லி: இ.பி.எப்.ஓ., என்னும் 'ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு', அதன் உறுப்பினர்கள், மருத்துவ தேவைகளுக்காக பணத்தை திரும்பப் பெறுவதற்கான உச்ச வரம்பை, 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கி உள்ளது. இந்த மாற்றம், கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இ.பி.எப்.ஓ., அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இ.பி.எப்.ஓ., உறுப்பினர்கள், தங்களது சொந்த அல்லது தங்களைச் சார்ந்தவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக, வைப்பு நிதியிலிருந்து முன்பணத்தைக் கோரலாம். முந்தைய நடைமுறைப்படி, இதன் வாயிலாக 50,000 ரூபாய் மட்டுமே பெற முடியும். ஆனால், இனி 1 லட்சம் ரூபாய் வரை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை பெறுவதற்கு, எந்த படிவங்களையும், மருத்துவ சான்றிதழ்கள், பிற ஆவணங்கள் என எதையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

