ADDED : ஆக 19, 2024 01:06 AM

புதுடில்லி,:இந்தியா, முதல்முறையாக குடிப்பதற்கு தயார் நிலையில் உள்ள அத்திப் பழ ஜூசை போலந்துக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் மேலும் தெரிவித்துஇருப்பதாவது:
நாட்டின் தனித்துவமான வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, போலந்து நாட்டுக்கு குடிப்பதற்கு தயார் நிலையில் உள்ள அத்திப் பழ ஜூசை, இந்தியா முதல்முறையாக ஏற்றுமதி செய்துள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற புரந்தர் அத்திப் பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தச் சாறு, 'ரெடி - டு - டிரிங்' எனப்படும் குடிப்பதற்கு தயார் நிலையில் உள்ள ஜூஸ் வகையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
புவிசார் குறியீட்டுடன் இந்த ஜூஸ் ஏற்றுமதி செய்யப்படுவதால், சட்டப்பாதுகாப்பு பெறுவதுடன், மற்றவர்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டையும் தடுக்கிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

