ADDED : ஜூலை 05, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்த ஆண்டு, 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியுவிற்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை, யங் லியு கடந்த 4ம் தேதி பெற்றுக் கொண்டார்.
யங் லியு கூறியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைக்கும் அனைவரின் சார்பாக இவ்விருதை ஏற்றுக்கொள்வது என் பாக்கியமாக கருதுகிறேன். இந்தியாவின் குடியரசு தலைவரை இந்த ஆண்டில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.