தொழில்நுட்ப பொருட்கள் இறக்குமதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹாங்காங், சீனா
தொழில்நுட்ப பொருட்கள் இறக்குமதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹாங்காங், சீனா
ADDED : மே 03, 2024 09:29 PM

புதுடில்லி:இந்தியாவின் மின்னணு, தொலைதொடர்பு மற்றும் மின்சார பொருட்கள் இறக்குமதி, கடந்த 2024ம் நிதியாண்டில், 7.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை, ஹாங்காங் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக, ஜி.டி.ஆர்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொலைதொடர்பு, மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் இறக்குமதியில், சீனாவின் பங்கு, 43.90 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 'குளோபல் டிரேடு ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா அதன் இறக்குமதிக்கு, ஹாங்காங் மற்றும் சீனாவை சார்ந்து இருப்பது, கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
போன்கள் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தொலைதொடர்பு சாதனங்களின் இறக்குமதி, 30,627 கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை பொருட்களுக்கான சந்தையில், சீனாவின் பங்கு 50 சதவீதத்துக்கு மேலாக உள்ளது.
நாட்டின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையை பாதுகாப்பதற்கு, சீனாவை சார்ந்து இருக்கும் இறக்குமதி அளவு குறைக்கப்பட வேண்டும்.
நம் அன்றாட வாழ்க்கையில், இத்துறைகள் மிகவும் முக்கியமாக உள்ளன. இந்தியா இத்துறை பொருட்கள் இறக்குமதிக்கு, சீனாவை பெரிதும் சார்ந்து இருப்பது, நாட்டின் தன்னாட்சி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு, பெரும் சவால்களை அளிக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு, மின்சார, தொலைதொடர்பு பொருட்கள் இறக்குமதி
சீனா பங்கு 43.90%
பிரிவு 2007 - 10 2020 - 22
(ரூபாய் கோடியில்)