ADDED : ஜூலை 27, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மொபைல் போன்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ - போன்களின் விலை, 300 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ - போன் மாடல்களான 13, 14 மற்றும் 15 உள்ளிட்ட போன்களின் விலை, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஐ - போன் எஸ்.இ., மாடல் விலை 2,300 ரூபாய் வரை குறைந்துள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டண பட்டியலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட புரோ வகை போன்களின் விலை 5,100 முதல் 6,000 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது.