ADDED : செப் 18, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சீனாவிடம் இருந்து நம் நாட்டின் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 15.55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், சீனாவுக்கு ஏற்றுமதி 22.44 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 8,400 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி நடைபெற்றது.
ஆனால், 90,700 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதியானதாக மத்திய வர்த்தக அமைச்சக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சீனாவுக்கான ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.30 சதவீதம் குறைந்துள்ளது. மாறாக, ஏற்றுமதி 10.96 சதவீதம் அதிகரித்துஉள்ளது.