ADDED : மே 09, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கின் விலை உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதத்தில், வீட்டில் தயாரித்த 'வெஜ் தாளி' எனும் சைவ சாப்பாட்டின் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக, கிரிசில் தெரிவித்துள்ளது.
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வால், இந்தியாவின் வடமாநில உணவு வகைகளில் ஒன்றான 'வெஜ் தாளி'யின் விலை, 8 சதவீதம் வரை உயர்ந்து, கடந்த ஏப்ரலில் 27.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய மார்ச்சில் 27.30 ரூபாயாக இருந்தது. வெங்கயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலை ஆண்டுக்கு முறையே 41,40,38 சதவீதம் உயர்ந்ததே சாப்பாடு விலை உயரக் காரணமாகும்.