ADDED : ஆக 06, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பு நிதியாண்டில் வலுவாக துவங்கிய ரூபாய், தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஜூலை முதல், ஆசிய நாணயங்களிலேயே டாலருக்கு எதிரான மதிப்பில், தைவான் டாலருக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாய் தான் இரண்டாவது மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வரும் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லாதது, ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க கடன் பத்திர வருவாய் அதிகரித்து காணப்பட்டதால், சரிந்த ரூபாயின் மதிப்பு, தற்போது முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவதால் சரிந்து வருகிறது.
இதையடுத்து, நேற்றைய வர்த்தக நேர முடிவில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசா சரிந்து, 84.09 ரூபாயாக இருந்தது. அதே வேளையில், தைவான் டாலரின் மதிப்பு 32.74 டாலராக இருந்தது.