ADDED : ஜூலை 20, 2024 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்தியாவின் முதல் 'எஸ்.யு.வி., கூப்' காரான, கர்வ் காரை காட்சிப்படுத்தியுள்ளது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த கார், பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வகையில் வர உள்ளது.
இந்த காரின் மின்சார வகை, ஆகஸ்ட் 7ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் களமிறக்கப்பட உள்ளன.
எஸ்.யு.வி., கார் சந்தையில், 'நெக்ஸான், பஞ்ச்' கார்களுக்கு கிடைத்தது போல, இந்த காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.