ADDED : செப் 13, 2024 01:22 AM

இடுக்கி: மத்திய அரசின் கீழ் இயங்கும் 'ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா' நிறுவனம், ஏலக்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 'கார்ட்ஸ்ஆப்' எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிறுவனத்தில், மசாலா பொருட்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில், ஏலக்காய் சாகுபடிக்கு புகழ்பெற்ற உடும்பஞ்சோலா மற்றும் இடுக்கி தாலுகாக்களில் உள்ள 19 கிராமங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, மண் வள வரைபடம் உட்பட முக்கியமான மண் பரிசோதனை முடிவுகளை வழங்கும் 'கார்ட்ஸ்ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு தரவு சார்ந்த தகவல்களை வழங்குவதன் வாயிலாக, உற்பத்தியை அதிகரிப்பதில், இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தவும் இந்த செயலி உதவும்.