ADDED : மார் 10, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவின் 'ஜெரோதா பண்டு ஹவுஸ்' வெள்ளி இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலையை ஒட்டி இந்த பண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 18ம் தேதி வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச விண்ணப்ப வரம்பு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டிலும், நவீன தொழில் துறையிலும் வெள்ளி முக்கிய பங்காற்றும் திறன் கொண்டுள்ளதாகவும், அதன் விலைமதிப்பற்ற தன்மையை பயன்படுத்திக்கொள்ள, இந்த இ.டி.எப்., வழிவகை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.