ADDED : மே 07, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி', மொத்தம் 13,472 கோடி ரூபாய் மதிப்புள்ள, 92 வாராக் கடன் கணக்குகளை, வரும் 28ம் தேதி ஆன்லைன் ஏலம் வாயிலாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் வரும் 13ம் தேதிக்கு முன்னதாக, விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 11.69 சதவீதமாக இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக் கடன், கடந்தாண்டு டிசம்பரில் 3.90 சதவீதமாக குறைந்துள்ளது.