ADDED : ஏப் 02, 2024 10:56 PM

புதுடில்லி:ஐ.ஆர்.இ.டி.ஏ., எனும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், கடந்த நிதியாண்டில், அதன் அதிகபட்ச கடன் ஒப்புதல் மற்றும் வழங்கலை பதிவு செய்ததாக, அறிவித்துள்ளது.
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 37,354 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், 25,089 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கியதாகவும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டிலும், கடன் ஒப்புதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.இ.டி.ஏ., செயல்பாடுகள் அமைந்துள்ளதை அடுத்து, இந்த வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 2022-23 2023-24 வளர்ச்சி - சதவீதத்தில்
(ரூபாய் கோடியில்)

