ADDED : மே 30, 2024 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐ.டி.சி., நிறுவனத்திலிருந்து அதன் ஹோட்டல் வணிகத்தை தனியாகப் பிரிக்கும் திட்டத்திற்கு, சி.சி.ஐ., எனும் இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.டி.சி., அதன் ஹோட்டல் வணிகத்தை, 'ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்' என்ற துணை நிறுவனத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக, கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது. இந்த பிரிப்பு திட்டத்திற்கு, இந்திய போட்டி ஆணையம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் நிறைவடைந்த பின், ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் பங்குகள் தனியாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும், இந்த புதிய நிறுவனத்தில் ஐ.டி.சி., 40 சதவீத பங்குகளையும், குழுமத்தின் பங்குதாரர்கள் 60 சதவீத பங்குகளையும் வைத்திருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.