ADDED : ஏப் 28, 2024 12:22 AM

திருப்பூர்:'பின்னலாடை தொழிற்சாலைகளில், நல்ல சம்பளம், உணவு, தங்குமிடத்துடன், வேலைவாய்ப்பு வழங்கப்படும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளதால், டெய்லர்கள், செக்கிங் பணியாளர், உதவியாளர், நிர்வாக பணியாளர், மெர்ச்சண்டைசிங் போன்ற பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பணியமர்த்தி, திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி அளித்து, தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கவும் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
வட மாநில தொழிலாளரும், தேர்தலுக்காக சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கான பணியாளர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
'நிட்டிங், டையிங், காம்பேக்டிங், பிரின்டிங்' தொழிற்சாலைகள், ஆடை உற்பத்திக்கான டெய்லர், செக்கிங் தொழிலாளர், உதவியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகினால், நிச்சயமாக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். சரியான சம்பளத்துடன், தங்குமிடம், உணவு வசதிகளுடன், வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

