ஜே.எஸ்.டபிள்யு., வசமாகும ் 'ஓரியன்ட் சிமென்ட்' பங்குகள்
ஜே.எஸ்.டபிள்யு., வசமாகும ் 'ஓரியன்ட் சிமென்ட்' பங்குகள்
ADDED : ஆக 01, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சி.கே.பிர்லா குழுமத்தின் 'ஓரியன்ட் சிமென்ட்' நிறுவன பங்குகளை வாங்குவதற்கான முயற்சியில், ஜே.எஸ்.டபிள்யு., சிமென்ட் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சிமென்ட் நிறுவனங்கள் மீது அதானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமங்கள் கவனம் செலுத்தி வருவதையடுத்து, ஜே.எஸ்.டபிள்யு., குழுமமும் களமிறங்கி உள்ளது. முதற்கட்டமாக ஓரியன்ட் சிமென்ட் நிறுவன பங்குகளை வாங்குவதற்கான முயற்சியை அது தீவிரப்படுத்தியுள்ளது. இதை, சந்தையில் தன் நிலையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறது. மேலும், இப்பங்குகளை வாங்கிய பின், தன் சிமென்ட் வணிகத்தை, வரும் 2025ம் ஆண்டில் பங்கு சந்தையில் பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளது.