ADDED : ஆக 14, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த ஜூலையில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 1.20 சதவீதம் சரிந்து, 2.82 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நாட்டின் சரக்கு இறக்குமதி, கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 7.45 சதவீதம் அதிகரித்து, 4.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்தாண்டு 4.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஜூலையில் 1.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.