UPDATED : மார் 22, 2024 12:34 PM
ADDED : மார் 22, 2024 12:34 AM

சென்னை: பரந்த அளவிலான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ப்ளூ ஸ்டார் நிறுவனம், 60 முதல் 600 லிட்டர் வரையிலான ஆற்றல் மற்றும் திறன் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய டீப் ப்ரீசர்களை அறிமுகம் செய்துள்ளது.
குளிர்சாதன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ப்ளூ ஸ்டார் நிறுவனம், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், விருந்தோம்பல் துறை போன்றவற்றுக்காக, புதிய வகை ப்ரீசர்களை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்த புதிய வகை டீப் ப்ரீசர்கள், அதிக கொள்ளளவு, மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் திறன் மற்றும் சிறப்பான தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தட்ப வெப்ப நிலைக்கு உகந்தவாறு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற ப்ரீசர்களுடன் ஒப்பிடுகையில், பரந்த அளவிலான சேமிப்பு திறன்களுடன், பால் மற்றும் ஐஸ்கிரீம், உறைந்த உணவுகள், உணவகங்கள், விருந்தோம்பல் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றின் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீப் ப்ரீசர்களின் விலை 16,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

