ADDED : மார் 29, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:எல்.ஐ.சி., அலுவலங்கள் இன்றும், நாளையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், வரி செலுத்துவோர் தங்கள் வரி சேமிப்பு பணிகளை முடிக்க உதவும் விதமாக, அலுவலகங்களை இன்றும், நாளையும் திறந்து வைக்க முடிவு செய்துள்ளதாக, எல்.ஐ.சி., அறிவித்துள்ளது.
இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அறிவுரையின் பேரில், இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, எல்.ஐ.சி., அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி, அரசு பரிவர்த்தனைகளுக்காக குறிப்பிட்ட சில வங்கி கிளைகளை, மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் திறந்து வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.

