ADDED : மே 08, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது 'டேட்டா சென்டர்' வணிகத்தை இந்தியாவில் விரிவாக்கும் நோக்கில், ஹைதராபாதில் கிட்டத்தட்ட 267 கோடி ரூபாய் மதிப்பிலான, 48 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேட்டா சென்டர்கள், கடந்த 5 ஆண்டுகளாக புனே, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டத்துடன், தற்போது ஹைதராபாதின் முக்கிய பகுதியில், 267 கோடி ரூபாய் மதிப்புடைய, 48 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

