கடலோர காவல் படைக்கு நவீன வானொலி ராணுவ அமைச்சகம் - பெல் ஒப்பந்தம்
கடலோர காவல் படைக்கு நவீன வானொலி ராணுவ அமைச்சகம் - பெல் ஒப்பந்தம்
ADDED : பிப் 21, 2025 11:49 PM

புதுடில்லி:கடலோர காவல் படைக்கு, 149 மென்பொருள் சார்ந்த வானொலிகளை கொள்முதல் செய்ய, 1,220 கோடி ரூபாய்க்கு, மத்திய பொது நிறுவனமான பெல் எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துஉள்ளது.
ராணுவ கொள்முதல் நடைமுறையின் கீழ் 'பை இந்தியன்' என்ற பிரிவின் கீழ் இந்த கொள்முதல் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து ராணுவ அமைச்சகம் கூறியதாவது:
இந்த வகையான வானொலிகள், அதிவேக இணையம் மற்றும் தொலைதொடர்பு இணைப்பின் வாயிலாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல்களை பகிர உதவியாக இருக்கும்.
மேலும், கடலோர காவல் படையின் திறனை அதிகரித்து, கடல்சார் சட்டம் அமலாக்கம், தேடல் மற்றும் மீட்பு பணிகள், மீன்வள மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
அத்துடன், கடற்படையுடன் ஒன்றிணைந்து செயல்படும் திறனையும் இது மேம்படுத்துகிறது.
'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ் வரும் இந்த ஒப்பந்தத்தால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.