ADDED : பிப் 21, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'மைக்கா, குவார்ட்ஸ்' போன்ற கனிமங்களை சிறிய கனிமங்கள் பட்டியலில் இருந்து, பெரிய கனிமங்களுக்கான வகைபாட்டிற்கு மாற்றியுள்ளதாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை பின்வருமாறு:
தேசிய முக்கிய கனிம வளங்கள் திட்டத்தின் கீழ் பேரியம் சல்பேட், சிலிகேட், மைக்கா, குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்கள் சிறிய கனிமங்கள் பட்டியலில் இருந்து பெரிய கனிமங்களின் வகைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறு கனிமங்களை மறுவகைப்படுத்தி, பெரிய கனிமங்கள் பட்டியலில் சேர்த்து, சுரங்கங்கள் ஒழுங்குபடுத்தப்படும். இதற்கான மாறுதல் காலமாக, வருகிற ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கனிம சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வருவாய், வழக்கம்போல் மாநில அரசுக்கே தொடர்ந்து செல்லும்.