sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மருத்துவ காப்பீடு பாலிசிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையா?

/

மருத்துவ காப்பீடு பாலிசிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையா?

மருத்துவ காப்பீடு பாலிசிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையா?

மருத்துவ காப்பீடு பாலிசிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையா?


ADDED : மே 27, 2024 12:33 AM

Google News

ADDED : மே 27, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காப்பீடு பாதுகாப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

மருத்துவ தேவைகளுக்கான காப்பீடு பாலிசிகள் பலவகையாக அமைகின்றன. மேலும், மருத்துவ காப்பீடு பாலிசிகள் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்கான 'ரைடர்' அம்சங்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு பாலிசியும் செலுத்தப்படும் பிரிமியம் தொகைக்கு ஏற்ற பாதுகாப்பு அளவை கொண்டிருக்கும்.

கூடுதலாக பிரிமியம் தொகை செலுத்துவதன் மூலம் அடிப்படை பாலிசி பாதுகாப்பு மீது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வசதியாக ரைடர்' அமைகிறது. பாலிசியில் விடுப்பட்டிருக்கும் அம்சங்களுக்கு ஈடு செய்ய அல்லது கூடுதல் பாதுகாப்பு பெற ரைடர் அம்சம் கைகொடுக்கிறது.

பலவித அம்சங்கள்


மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் ரைடர் அம்சங்களை நாடுவதும் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பதினைந்து சதவீத வாடிக்கையாளர்களே ரைடர் வசதியை நாடிய நிலையில் இது தற்போது அறுபது சதவீதமாக அதிகரித்திருப்பதாக இணைய காப்பீடு சேவை நிறுவனம் பாலிஸிபஜார் தகவல் தெரிவிக்கிறது.

எனவே, பலவிதமான ரைடர் அம்சம் பற்றி அறிந்திருப்பதும், அவை தேவையா என பரிசீலித்து தீர்மானிப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

காப்பீடு பாலிசிகள் பல்வேறு அம்சங்களை கொண்டிருப்பதால், ரைடர்களும் பலவிதமாக அமைந்துள்ளன. உதாரணமாக, சம் இன்ஸ்யூர்டு தொடர்பான ரைடர், பாலிசியின் போனஸ் தொகையை அதிகரிக்க வழி செய்கிறது. குறிப்பிட்ட ஆண்டில் பாலிசியில் எந்த கோரிக்கையும் இல்லை எனில், அதற்கேற்ற போனஸ் தொகை வழங்கப்படுகிறது.

பொதுவாக இது பாதுகாப்பு தொகையில் பத்து முதல் இருபது சதவீதம் வரை இருக்கலாம். இந்த தொகையை ஆண்டு அடிப்படையில் நூறு சதவீதம் அதிகமாக்கி கொள்ள இந்த ரைடர் உதவுகிறது.

இதே போல, பெரும்பாலான மருத்துவ பாலிசிகளில், மருத்துவ மனை செலவுகளில், மருத்துவ உதிரிப்பொருட்களுக்கான செலவு களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். இந்த தொகையை பயனாளிகள் தனியே செலுத்த வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில் தனியே ரைடர் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் பல பாலிசிகள் மருத்துவமனை அறைகள் தொடர்பாக வரம்புகளை கொண்டிருக்கலாம். எனில், இந்த வரம்பை உயர்த்துவதற்கான ரைடர் அம்சத்தை நாடலாம். இதன் மூலம் எந்த வகையான மருத்துவமனை அறையிலும் தங்கி சிகிச்சை பெறலாம்.

தேவை என்ன?


மருத்துவ பாலிசிகளின் முக்கிய வரம்பாக ஏற்கனவே உள்ள நோய்களுக்கான அம்சம் அமைகிறது. பாலிசிகள் இதற்கான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன. இது தொடர்பான ரைடர் அம்சத்தை நாடினால், பாலிசி துவங்கும் போதே சிகிச்சை வாய்ப்பையும் பெறலாம்.

வழக்கமாக பொருந்தக்கூடிய வேறு சில விலக்கங்களுக்கான சேவை பெற விரும்பினாலும் அவற்றுக்கு ஏற்ற ரைடர் அம்சங்களை நாடலாம். மருத்துவ பாலிசிகள் பயனாளிகளின் தேவைக்கேற்ப அமைய வேண்டும்.

எனினும், பாலிசியை தேர்வு செய்வது போலவே ரைடர் அம்சத்தை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ நிலை, எதிர்கால தேவை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ரைடர் தொடர்பான நிபந்தனை அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரைடர்களை விட தனி பாலிசி பொருத்தமானதாக அமையலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us