ADDED : மே 10, 2024 04:09 AM

புதுடில்லி : புதிய தலைமுறை 'ஸ்விப்ட்' காரை, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு, 'ஸ்விப்ட் எபிக் 2024' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில், இதில் ஹெட் லேம்ப், டெயில் லேம்ப், கிரில் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உட்புறத்திலும், 9 அங்குல தொடுதிரை, புதுப்பிக்கப்பட்ட ஸ்விட்ச் கியர் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் 1.2 லிட்டர் செட் சீரிஸ் இன்ஜின், மேனுயுவல் வேரியன்டில் 10 சதவீதம்; ஆட்டோமேட்டிக் வேரியன்டில் 14 சதவீதம் அளவுக்கு எரிபொருள் சேமிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு காற்று பைகளுடன், 9 நிறங்களில் வரும் புதிய ஸ்விப்ட், 6.49 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. 17,436 ரூபாய் மாதாந்திர சந்தாவிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.