ADDED : செப் 04, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மின்சார கார், மாற்று எரிபொருளில் இயங்கத்தக்க இன்ஜின் கொண்ட 'ஹைபிரிட்' வகை வாகனங்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி விதிப்பு தொடரும் என, ஜி - 20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் துாதர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
மின்சார கார்களுக்கு, 5 சதவீதமும்; ஹைபிரிட் கார்களுக்கு, 28 சதவீதமும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. ஹைபிரிட் கார்களுக்கு, ஜி.எஸ்.டி., தவிர செஸ் உள்ளிட்ட கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதால், மொத்த வரி விதிப்பு 48 சதவீதமாக உள்ளது. வரியை குறைக்குமாறு 'மாருதி சுசூகி, டொயோட்டா, ஹோண்டா' நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.