ADDED : மே 31, 2024 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பங்கு தரகர்கள் இணையதள அடிப்படையிலான வர்த்தக சேவையை வழங்குவதற்கு, விண்ணப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் பங்கு சந்தைகள் ஒப்புதல் வழங்க வேண்டும் என 'செபி' உத்தரவிட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, விண்ணப்பித்து 30 நாட்களுக்குள், பங்கு சந்தைகள் இது தொடர்பாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
இந்நிலையில், வணிகத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செபி மேலும் தெரிவித்துள்ளது.