ADDED : பிப் 27, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய அரசு, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கன்ட்ரோலர் ஜெனரலின் தலைமையகத்தை, மும்பையில் இருந்து டில்லிக்கு மாற்றி அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, பவுதிக் சம்பதா பவன், துவாரகா, டில்லி என்ற முகவரியிலேயே இனி கன்ட்ரோலர் ஜெனரலின் அலுவல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

