வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வோர்:குஜராத்துக்கு முதலிடம்;தமிழகம் எட்டாம் இடம்
வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வோர்:குஜராத்துக்கு முதலிடம்;தமிழகம் எட்டாம் இடம்
ADDED : பிப் 21, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வாரத்துக்கு 70 மணி நேர வேலை, 90 மணி நேர வேலை என பணி நேரம் குறித்து தொழில்துறை வல்லுனர்கள் சமீபகாலமாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருவது பெரிய பேசு பொருளாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், வெவ்வேறு துறை, சமூக பின்னணி, பாலினம் வாரியாக வேலை நேரம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட நேர பயன்பாடு ஆய்வு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

