ADDED : ஆக 03, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மாலத்தீவுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை, கண்ட்லா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்த இரு துறைமுகங்களையும் சேர்த்து, மாலத்தீவுக்கு ஏற்றுமதிக்காக அனுமதிக்கப்பட்ட துறைமுகங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பொறுப்பேற்றார். அதன்பின், அந்நாட்டில் இருந்த நம் நாட்டு ராணுவத்தினரை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்தியா - மாலத்தீவு இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதிக்கு, தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.