ADDED : மே 08, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடப்பு சந்தைப்படுத்துதல் ஆண்டில், 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு, 'இஸ்மா' எனும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உள்நாட்டு வினியோகத்தை ஊக்குவிக்கவும், நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.
எனினும் உற்பத்தி அதிகரித்துள்ளது. சர்க்கரை இருப்பு, அடுத்து ஆண்டும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

