சென்னையில் ரூ.200 கோடி முதலீடு முதல்வர் முன்னிலையில் 'ஈட்டன்' ஒப்பந்தம் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
சென்னையில் ரூ.200 கோடி முதலீடு முதல்வர் முன்னிலையில் 'ஈட்டன்' ஒப்பந்தம் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ADDED : செப் 05, 2024 03:32 AM

அஷ்யூரன்ட் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே, இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை, சென்னையில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, செப். 5-
'ஈட்டன்' நிறுவனம், தமிழகத்தில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில், முதல்வர் முன்னிலையில், ஈட்டன் மற்றும் 'அஷ்யூரன்ட்' நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஈட்டன் கார்ப்பரேஷன் நிறுவனம், தரவு மையம், குடியிருப்பு, விண்வெளி, இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மானப் பணிகளை செய்யும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு வேலை அளிக்கும் வகையில், சென்னையில் தற்போது உள்ள நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்கம் செய்வதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது.