ADDED : ஜூலை 03, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை 22.72 சதவீதம் உயர்ந்து, விறுவிறுப்பான நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 12.58 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஜூனில் 15.44 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் பருவமழை மற்றும் பண்டிகை நாட்கள், இருசக்கர வாகன விற்பனையை, ஏறுமுகத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.